ரஷ்யாவின் கசான் நகரில், உக்ரைன் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) உயர் கோபுர கட்டிடங்களை தாக்கியுள்ளன. இந்த தாக்குதலில் கட்டிடங்களில் தீப்பிழம்புகள் ஏற்பட்டன, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
கசான் நகரம் ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசின் தலைநகராகும். இந்த நகரில் நடந்த இந்த தாக்குதல், அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலை நினைவூட்டுகிறது.
கட்டிடங்களில் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. குறிப்பாக, கமலீவ் அவென்யூ, கிளாரா ஜெட்கின் தெரு, யுகோஜின்ஸ்காயா தெரு, ஹாடி தக்டாஷ் தெரு, கிராஸ்னயா பொசிசியா தெரு மற்றும் ஓரன்பர்க் ட்ராக்ட் தெரு ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை, ஆனால் ரஷ்யா இதற்கு பதிலடி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.