முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும். அரசியல் தலைவர்கள் கருத்து.

By Web Desk

Updated on:

---Advertisement---

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத் தொகை சேர்க்கப்படாததை எதிர்த்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழங்காதது மக்களை ஏமாற்றும் செயல். அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் எதைச் செய்யப் போகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம்:

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், “அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 ரொக்கம், பொங்கல் தொகுப்புடன் வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ்:

பாமக நிறுவனர் ராமதாஸ், “திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

பிரேமலதா:

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “ஏற்கெனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் போய்ச் சேராத நிலையில், குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசுடன் வழக்கமாக வழங்கப்படும் ரூ.1,000 ரொக்கத்தையாவது தாமதமின்றி மக்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

முத்தரசன்:

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், “பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாவிட்டால் எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் ஏமாற்றமடைவார்கள். இதை கருத்தில் கொண்டு பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கத் தொகையையும் சேர்த்து அரசு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கே. பாலகிருஷ்ணன்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் தயராகி வரும் நிலையில் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டுவது பொருத்தமல்ல. எனவே பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்:

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ரொக்கப் பணம் இல்லாத தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழை, எளிய மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. பொங்கல் பண்டிகையையொட்டி ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.