சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள காரைக்காடு பகுதியில், டிசம்பர் 27, 2024 அன்று, தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் வடமாநிலத்தவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வர மலைக்கு சென்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா பேருந்து, காரைக்காடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சோதனைச் சாவடியில் காவலர்களால் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது, மது போதையில் இருந்த ஒரு பயணி, காவலரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதனால், காவலர்கள் சுகனேஸ்வரன் மற்றும் செந்தில்குமார் காயமடைந்தனர்.
சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், பேருந்தைச் சுற்றி, தாக்குதலில் ஈடுபட்டவரை பிடித்து, காவலரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்டவரை பொது மக்கள் தாக்கினர். கொளத்தூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து, குறித்த நபரை கைது செய்து, சுற்றுலா பேருந்தை பறிமுதல் செய்தனர். தற்போது, கைதான நபரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலரை தாக்கிய வடமாநிலத்தவரை பொதுமக்கள் மற்றும் காவலர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.