முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

பிரபல எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு.

By Web Desk

Published on:

---Advertisement---

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் (91) மாரடைப்பால் கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், டிசம்பர் 25, 2024 அன்று காலமானார்.

மலையாள இலக்கியத்திலும் திரையுலகிலும் அழியாத முத்திரை பதித்த எம்.டி. வாசுதேவன் நாயர், பத்ம பூஷண் விருது பெற்றவர். சிறந்த திரைக்கதைகளுக்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, “மலையாள சினிமா மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவரான எம்.டி. வாசுதேவன் நாயரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது படைப்புகள் தலைமுறைகளை வடிவமைத்துள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், “ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம். மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி. வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்,” என்று தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

நடிகர் மோகன்லால், “தான் நடித்த மிகச்சிறந்த கதாபாத்திரங்களை எம்.டி. வாசுதேவன் நாயர் உருவாக்கினார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.டி. வாசுதேவன் நாயரின் மறைவு, இந்திய இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் பேரிழப்பாகும். அவரது படைப்புகள் மற்றும் பங்களிப்புகள் என்றும் நினைவில் நிற்கும்.