திண்டுக்கல் நந்தவனபட்டி பகுதியில் ஹோட்டல் முன்பு பொன்னுவேல்(35) என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6,40,000 பணத்தை திருடி சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் DSP. சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், டி.எஸ்.பி தனிப்படை SSI. தர்மராஜ் காவலர்கள் மணிவாசகம், மணிகண்டன், ஜஸ்டின், குபேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டி (65), பாண்டியராஜன்(58) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பணம், 17 கிராம் தங்கம், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.