முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

அமரன் திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வேர்களின் வீடுகளில் தீவரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை.

By Web Desk

Published on:

---Advertisement---

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் – கைதானவர்கள் வீடுகளில் தீவரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

நவம்பர் 16, 2024 அன்று, நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டபோது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மேலப்பாளையம் போலீசார் மற்றும் தென்மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு இணைந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது யூசுப் ரசின் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும், இன்னொரு நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு பாதகமாக செயல்பட்டதாகவும், வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது கைதானவர்கள் வீடுகளில் தீவரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்துள்ளனர்.