விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவி, அவரின் மனைவி ஆர்த்தி மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுரை
தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், இருதரப்பும் மனம் விட்டு பேச அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே சமரச பேச்சுவார்த்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தை முடியவில்லை என மத்தியஸ்தர் தெரிவித்ததையடுத்து, இந்த உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து 1 மணிநேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.