முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு வாட்ச் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்

By Web Desk

Published on:

---Advertisement---

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் குகேஷ், சீன வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, உலக செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இதன் மூலம், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இந்த வெற்றியை முன்னிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன், குகேஷை நேரில் சந்தித்து பாராட்டினார். அந்த சந்திப்பில், சிவகார்த்திகேயன் குகேஷுடன் இணைந்து கேக் வெட்டி, அவருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்தார். இந்த நிகழ்வில் குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர்.

குகேஷின் இந்த சாதனைக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.