திண்டுக்கல், இந்திராநகரை சேர்ந்த தமிழ்செல்வி(70) இவர் கடந்த ஜூலை மாதம் ரயில் நிலையம் அருகே உள்ள ATM-ல் பணம் எடுப்பதற்காக சென்றபோது மர்மநபர் நூதன முறையில் தமிழ்செல்வியை ஏமாற்றி ATM-கார்டை திருடி வங்கி கணக்கில் இருந்த ரூ.1,30,000 பணத்தை திருடியதாக நகர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து நகர் DSP கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கர்நாடகாவை சேர்ந்த வெங்கடாராமப்பா மகன் திம்மராயப்பா(41) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டியிடம் ATM- கார்டை நூதன முறையில் திருடி ரூ.1,30,000 கொள்ளை.
By Web Desk
Published on:










