திண்டுக்கல்லில் சுறா திரைப்படத்தின் போது நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போடப்பட்ட வழக்கில் விடுதலை.
திண்டுக்கல்லில் கடந்த 2010-ம் ஆண்டு சுறா திரைப்படம் கணேஷ் திரையரங்கில் வெளியிடப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் வாசுதேவன் (எ) தேவா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் விசாரணையில் இருந்து வந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பாக தவெக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகளாக வழக்கறிஞர்கள் ஆசிப், சதீஷ்குமார், ஜான்ஜோசப், குருமூர்த்தி ஆகியோரின் முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள் தவெக மாவட்டச் செயலாளர் வாசுதேவன் (எ) தேவா உள்ளிட்ட நிர்வாகிகளை குற்றவாளிகள் இல்லை என விடுதலை செய்ய உத்தரவிட்டார்.















